MARC காட்சி

Back
திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோயில்
245 : _ _ |a திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோயில் -
246 : _ _ |a திருக்கச்சூர் மலைக்கோயில்
520 : _ _ |a திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆலக்கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க, இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினாராம். பசி நீங்கப் பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாயோரி ' என்னும் பதிகம் பாடிப் போற்றினார். முதலில் ஆலக்கோயிலையும், பின்பு மருந்தீசர் கோயிலையும் தரிசிக்க வேண்டும் என்பது மரபு.
653 : _ _ |a சிவன் கோயில், பாடல் பெற்ற தலங்கள், தேவாரத் தலங்கள், தொண்டை மண்டலக் கோயில்கள், தமிழ்நாட்டு சிவாலயங்கள், திருஞானசம்பந்தர், காஞ்சிபுரம், திருக்கச்சூர், ஆலக்கோயில், கச்சபேசுவரர் கோயில், விருந்திட்ட ஈசுவரர் கோயில், ஈஸ்வரர் கோயில், செங்கல்பட்டு, இருள்நீக்கிய அம்மை, மலைக்கோயில், தொண்டை மண்டலத்துக் கோயில், உபயக் கோயில், மலையடிவாரக் கோயில்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 044 - 27464325, 09381186389
905 : _ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம்.
914 : _ _ |a 12.772602
915 : _ _ |a 79.997102
918 : _ _ |a இருள்நீக்கிய அம்மை
922 : _ _ |a ஆல்
923 : _ _ |a கூர்ம தீர்த்தம்
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a மகாசிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a மகாமண்டபத்தில் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்துள்ளன. இவற்றில், துவார பாலர்கள், லிங்கோத்பவர், மாவடி சேவை, பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் என பலரின் சிற்பங்கள் வெகு அழகாக அமைந்துள்ளன. மண்டபத்தின் நடுவில் தாமரை போன்ற அமைப்பில் சிறிய சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றின் கருவறை விமானத்தின் தேவகோட்டத்தில் அமைந்த விநாயகர், தென்முகக்கடவுள், திருமால், நான்முகன் ஆகிய சிற்பங்களைக் காணமுடிகின்றது. சண்டிகேசுவரர் இங்கே பிரம்மமுக சண்டிகேசுவரராக, நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். அம்மன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அபய வரதக்கரங்களுடன் திகழ்கிறார்.
930 : _ _ |a ஒருமுறை, கொடுமையான நோவு கண்ட இந்திரன், தம் நோய் தீர நாரதரின் அறிவுரையை நாடினான். அவரும், ஏற்கெனவே சிவனும் திருமாலும் அருகருகே வீற்றிருக்கும் இம் மருந்து மலையினைச் சொல்லி, இங்கே பலை, அதிபலை எனும் இரு மூலிகைகள் இருக்கும். அவையே உன் நோவுக்குத் தீர்வு என்றாராம். இதனால், இந்திரன், சிவ பெருமானை நினைந்து கடும் தவம் இருந்தான். ஆயினும் நினைத்த பலன் கிட்டவில்லை. எனவே, மீண்டும் நாரதரிடம் வழி கேட்க, அவரோ அன்னையை மறந்து தவம் செய்ததால், உனக்கு அம்மூலிகைகள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றார். தம் தவற்றை உணர்ந்த இந்திரன், இம்முறை அன்னையை மனத்தில் தியானித்து, ஈசனை வழிபட்டான். அவனது தவத்துக்கு மனம் இரங்கிய அம்பிகை, தம் பேரொளியால், மூலிகை இருக்கும் பகுதியை இந்திரனுக்குக் காட்டிக் கொடுத்தாள். இவ்வாறு இருள் நீக்கி, ஒளி கூட்டி, மூலிகையைக் காட்டிக் கொடுத்த அம்பிகைக்கு இருள் நீக்கி அம்மன் எனும் பேர் வந்தது. சிவபெருமான் ‘மருந்தீஸ்வரர்' எனும் பேரில் திகழ்ந்தார். அப்போது, மூலிகை தேடி தாம் பட்ட கஷ்டத்தை சிவபெருமானிடம் முறையிட்ட இந்திரன், சாதாரண மனிதர்களுக்கு பயன் அளிக்கும் படி அருள் புரிய வேண்டினான். அவனது வேண்டுதலைக் கேட்டருளிய ஈசன், இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே இனி மூலிகை மருந்தாக மாறி பூலோகவாசிகளுக்கு பயனளிக்கும் என்று வரம் அருளினார். இங்கே, மருந்தீஸ்வரர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷம் முதலியவை நீங்கப்பெறலாம். அகத்தியரும் அழுகுணி சித்தரும் இங்கே தவம் செய்தனராம். எனவே பௌர்ணமி நாளில் இங்கே அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால், நம் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார்கள். இம் மலையினை பௌர்ணமிகளிலும், அவரவர் நட்சத்திர நாளிலும் வலம் வருதல் சிறப்பு எனப்படுகிறது. மலைக்கோயில் மருந்தீஸ்வரர் கோயில் சகல பிணிகளையும் தீர்ப்பதாக நம்பிக்கை.
932 : _ _ |a திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலாகத் திகழ்கிறது, மருந்து மலை மருந்தீஸ்வரர் கோயில். கோயிலின் முன் நான்கு கால் மண்டபம், ராஜகோபுரம் இல்லாத நுழைவாயில் ஆகியவற்றைக் கடந்து செல்லலாம். உள்ளே, 'மண்ணே மருந்தான' மருந்தீசர் சந்நிதி முகப்பு. உள்ளே நுழையும்போதே, மகாமண்டபத்தில் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்துள்ளன. அம்பிகைக்குத் தனிச்சிறப்பு சேர்க்கும் இக்கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான ஒளஷதை எனும் சக்தி பீடம் என்கிறார்கள். அதற்கேற்ப இங்கே அம்பிகை இருள் நீக்கி அம்மை எனும் பெயரில் திகழ்கிறார். ஆலயத்தினுள்ளே விநாயகரை வழிபட்டு வரும் போது, சுவாமி சன்னிதிக்கு எதிரில் ஒரு சாளரம் உள்ளது. கொடிமரத்தின் அருகே நாகலிங்க மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் உள்ளன. சுப்பிரமணியர் சந்நிதி அருகே, 'ஔஷத தீர்த்தக் குளம்' உள்ளது. கீழிறங்கிச் செல்லும் வகையில், படிக்கற்கள் உள் பக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே, நவக்கிரக சன்னிதி உள்ளது. பைரவர் சன்னிதியும் இங்கே சிறப்பு. விநாயகரின் நேர் பார்வையில் நவகிரக சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில்
935 : _ _ |a சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
936 : _ _ |a காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
937 : _ _ |a திருக்கச்சூர்
938 : _ _ |a செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில்
939 : _ _ |a மீனம்பாக்கம்
940 : _ _ |a செங்கல்பட்டு வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000320
barcode : TVA_TEM_000320
book category : சைவம்
cover images TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0007.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0008.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0009.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0010.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0011.jpg

TVA_TEM_000320/TVA_TEM_000320_திருக்கச்சூர்_மருந்தீசுவரர்-கோயில்-0012.jpg